அறநெறிப்
பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் சமூகத்தில்
நற்பிரiஐகளாக இருப்பதைப் பார்க்கிறோம். அறநெறிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் கீழ்படிவுள்ள மாணவர்களாகவும் நல்ல பண்புகள் மிக்கவர்களாகவும்
இருக்கிறார்கள். ஞாயிறு தினங்களிலாவது தனியார் வகுப்புக்களுக்கு செல்லாது மாணவர்கள்
அறநெறிப் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும் இதற்கு தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசியர்கள்
விருப்பம் தெரிவிப்பதில்லை என்று மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச தெரிவித்தார்.
நீர்கொழும்பு,
குரணை சாந்த ஆனா மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நீர்கொழும்பு வலய அதிபர்களுக்காக விசேட
கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயம் ஏற்பாடு செய்திருந்த
இந்த விசேடக் கூட்டம் திங்கட்கிழமை (16-11-2015) காலை (16) நடைபெற்றது. இந்நிகழ்வில் மேல் மாகாண
சபை அமைச்சர் லலித் வணிகரத்ன, மேல் மாகாண சபை
உறுப்பினர்களான ரொயிஸ் பெர்னாந்து, மெரில் பெரேரா, மேல் மாகாண கல்வி அமைச்சரின்
இணைப்பாளர் ஜே.ஏ.டி.எல்.ஹேமச்சந்திர, நீர்கொழும்பு
வலய கல்வி அதிகாரிகள், நீர்கொழும்பு, வலய பாடசாலை அதிபர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
மேல்
மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
ஆசிரியர்
சேவையில் அதிகமாக பெண்களே பணியாற்றுகின்றனர். இதன்காரணமாக இந்த சேவையில் பிரசவ விடுமுறை
பெறுவது அதிகரித்து பிரச்சினையாக மாறியுள்ளது. புதிதாக நியமனம் பெறுபவர்களும் திருமணமாகி
பிரசவ விடுமுறை பெற்றுக் கொள்கிறார்கள். மேல் மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களின் எண்ணிக்கை
மேலதிகமாக காணப்பட்ட போதிலும் நீர்கொழும்பு
மற்றும் மத்துகம வலயங்களில் ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறைக் காணப்படுகிறது.
இனிமேல்
மேல் மாகாணப் பாடசாலைகளில் பதில் அதிபர்கள்
நியமனம் செய்யப்படமாட்டார்கள். எமது மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் 100 இற்கு
மேற்பட்ட புள்ளிகளைப் பெறுவது எமது இலக்காகும்.
சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்திலும் பிரதான பாடங்களிலும் மாணவர்களை
சித்தியடையச் செய்வதற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.
கணிதப் பாடத்தில் மாணவர்களைச் சித்தியடையச்
செய்வதற்கு குறுகிய கால வேலைத்திட்;டங்களை
வகுத்துள்ளளோம்.
நீர்கொழும்பு கல்வி வலயத்தில் ஆசிரியர் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும்,
மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கும் அதிக நிதியை ஒதுக்கவுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment