Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, December 29, 2015

நல்லாட்சியில் பல்வேறு குற்றச் செயல்களைப் புரிந்த சிலர் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். - முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா

இன்று நிலவும் நல்லாட்சியில்  பல்வேறு குற்றச் செயல்களைப் புரிந்த சிலர் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளதாகத்தான் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் நினைத்தார்கள். ஆயினும் அவ்வாறு நடைபெறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி அல்ல தற்போது நடைபெறுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.



நீர்கொழும்பு   மாநகர சபை உறுப்பினர் கிஹான் பெர்னாந்துவின்  ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை  வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா  மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (28) மாலை நீர்கொழும்பு பெரியமுல்லை அபேசிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து, கத்தோலிக்க மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
 கடந்து ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். அந்த மாற்றம் வெற்றிபெற சகலரும் உழைக்க வேண்டும். சிறுவர் துஸ்பிரயோகம். பாலியல் வல்லுறவு உட்பட பல்வேறு குற்றச் செயல்களை புரிந்தவர்கள் இந்த நல்லாட்சியில் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும்  இருக்கிறார்கள். இதை சொல்வதற்கு நான் தயங்கவி;ல்லை.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்  உயர் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களை நீர்கொழும்பு நகரில் எந்த பாடசாலைகளுக்கு அனுப்புவது என்ற சவால் இருக்கிறது. கத்தோலிக்க பிள்ளைகளுக்காக அமைக்கப்பட்ட சில பாடசாலைகளில் ஏழை மாணவர்களை சேர்க்க முடியாதுள்ளது. வசதிபடைத்த குடும்பங்களைச் சேரந்த பிள்ளைகளே இங்கு கல்வி கற்க முடியும் என்றார்.


 





No comments:

Post a Comment