கொழும்பு
– நீர்கொழும்பு பிரதான வீதியில் குரணை பிரதேசத்தில் இடம்பெற்ற கை குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் காயங்களுக்கு உள்ளாகி அதில் ஒருவர்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம்
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில்
குரணை பராக்கிரம வீதி அருகில் இடம்பெற்றுள்ளது.
வாகன
விற்பனை நிலையமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டடிருந்த மோட்டார் வாகனங்கள் இரண்டும் அந்த
வீதி வழியாக பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றும் இந்த வெடிப்புச் சம்பவத்தில் சேதத்திற்கு
உள்ளாகியுள்ளது.
இச்
சம்பவத்தில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
ஒருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். படு காயமடைந்த மறறைய நபர நீர்கொழும்பு
மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குரணை பிரதேசத்தைச் சேர்ந்த எம். லூஜின்
பெர்னாந்து எனி;பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். 52 வயதுடைய இவர் இரு
பிள்ளைகளின் தந்தையாவார்.
இதேவேளை
இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் (டீஐஜி) எல்.டி. குலரத்ன மற்றும் நீர்கொழும்பு
பிரதேச பொலிஸ் அதிகாரிகள் வருகை தந்து பார்வையிட்டனர்.
இச்சம்பவம்
தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment