சட்டவிரோதமான
முறையில் நீண்ட காலமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், பாரிய அளவிலான மதுபானம்
கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மன வேதனையடைந்த நபர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கட்டுலந்த,
அக்கரகம பிரதேசத்தைச் சேர்ந்pத தசநாயக்க முதியான்ஸலாகே
உபாலி லக்ஸ்மன் (51 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே தற்கொலை செய்து கொண்டவராவார்.
தற்கொலை
செய்து கொண்ட நபர் நீண்ட காலமாக சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வந்தவராவார்.
இவரது மனைவி வெளிநாட்டில் தொழில் செய்பவராவார்.
நீர்கொழும்பு
பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கடந்த மூன்றாம் திகதி பகல் அந்த நபரின் மதுபான தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைத்து
752 டிரேம்ஸ் மதுபானம், கோடா டிரேம்ஸ்
2100 அடங்கிய இரண்டு பரல்கள், மதுபானம் தயாரிக்க
பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோத
மதுபானம் மற்றும் உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியதை தனது தோட்டத்தில் மறைந்திருந்து பார்த்த குறித்த
நபர், சமையலறைக்குச் சென்று அங்கிருந்த கிருமிநாசினியை பருகியுள்ளார். சுற்றி வளைப்பை
மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அந்த நபரை அக்கரகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர்
அங்கிந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு அன்றைய
தினம் (3 ஆம் திகதி) இரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம்
தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment