தனியார் பஸ்ஸில் பயணித்த கணவனை தாக்கி மனைவியை பாலியல்
ரீதியில் துன்புறுத்தல் செய்த தனியார் பஸ்
சாரதி மற்றும் நடத்துனரை நீர்கொழும்பு மஜி;ஸ்டரேட் ருத்திர வெலிவத்த பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
உடுகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த வெல்ல சூரிய ஆரியரத்ன (54 வயது), வெல்ல சூரிய ஆராச்சிலாகே கிரிசாந்த சம்பத் (32 வயது) ஆகியோரே தலா இரண்டாயிரத்து 500 ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 25 ஆயிரம்(25000 ரூபா) ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை
செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர். பஸ் நடத்துனராகவும்
(தந்தை) சாரதியாகவும் (மகன்); தொழில் புரியும்; இவர்கள் இருவரும் தந்தையும் மகனும் ஆவார்கள்.
பொலிஸ் முறைப்பாட்டின்படி,
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (8) கட்டுநாயக்க எவரிவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
முறைப்பாட்டாளர்களான கணவனும் மனைவியும் சந்தேக நபரகளின் பஸ்ஸில் பயணிக்கும் போது குறித்த
பெண்ணுக்கு நடத்துனரால் பாலியல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்துனருடன் முறைப்பாட்டளர்களுக்கு
பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து முறைப்பாட்டாளரான கணவன் பஸ் நிலையத்தில் வைத்து சந்தேக நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம்
தொடர்பாக கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் (சனிக்கிழமை) ஆஜர் செய்யப்பட்போதே சந்தேக நபர்களை
பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment