அண்மையில் வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி சிறந்தபெறுபேறுகளைப் பெற்றுள்ளது.
விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய 9 மாணவர்களில் 7 பேர்
(77.7 வீதம்) பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றுள்ளனர். கணிதப் பிரிவில்
தோற்றியதோற்றிய 10 மாணவர்களில் 6 பேர் (60 வீதம்) பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க
தகுதிபெற்றுள்ளனர். வர்த்தகப் பிரிவில் தோற்றியதோற்றிய 32 மாணவர்களில் 25 (78.12 வீதம்)
மாணவர்களும், கலைப் பிரிவில் தோற்றிய 23 மாணவர்களில் 16 (69.5 வீதம்) மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு
விண்ணப்பிக்கத் தகுதிபெற்றுள்ளதாக
கல்லூரி அதிபர் என். புவனேஸ்வரராஜா தெரிவித்தார்.
வர்த்தகப்
பிரிவில் ஒரு மாணவன் மூன்று 'ஏ' சித்திகளையும், விஞ்ஞானப் பிரிவில் ஒரு மாணவர் இரண்டு
'ஏ' சித்திகளையும் ஒரு 'பி' சித்தியையும் பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
- எம்.இஸட்.ஷாஜஹான்
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment