Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, January 14, 2016

சமூக சேவைகளால் தன்னை அர்ப்பணித்த காலஞ்சென்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். மிஹினார்

 ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். மிஹினார் இறையடி சேர்ந்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. அன்னார் கடந்த 29-12-2015 திகதி அன்று தனது 77 ஆம் வயதில் காலமானார். அவரது மறைவு நீர்கொழும்பு முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகும்.
நீர்கொழும்பு, பெரியமுல்லையில்  இலக்கம் 45, ஐ{ம்மா மஸ்ஐpத் வீதி வாழ்ந்து மறைந்த அன்னாரின் பல்வேறுபட்ட சமூக சேவைகள் மறைக்கவோ மறக்கவோ முடியாதவையாகும்.
45 வருடங்களுக்கு மேல் சமூக சேவையாற்றி வரும் நீர்கொழும்பு ஆமிலுல் இஸ்லாம் சங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவர் மர்ஹும் எம்.ஆர்.எம். மிஹினார்
அவர்களாவர். இதனூடாக நீர்கொழும்பு முஸ்லிம் மாதர் சங்கத்திற்கும் அல-ஹஸ்ஹர் பாலர் பாடசாலைக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கி அவைகளின்
வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கினார். முஸ்லிம் கலாசார, மார்க்க நிகழ்வுகள் நாடெங்கும் நிகழ வேண்டும் என்ற முயற்சியில் இவர் பெரிதும் பாடுபட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை, நீர்கொழும்பு, தளுபத்தையில் அமைந்துள்ள பல்லன்சேனை சிறுவர் சீர்த்திருத்த நிலையம்  ஆகியவற்றில்  ஒவ்வொரு வருடமும்  இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வையும் , ரமழான் மாத தராவீஹ் தொழுகை, இரு பெருநாள் தொழுகைகள், நபிகள் நாயகம் பிறந்த மாதத்தின் மீலாத் விழா போன்றவைகளை சீராக நடைபெற முழு ஏற்பாட்டையும் செய்து முன்னோடியாக வாழ்ந்தார்.
 இவர் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை அங்கத்தவராகவும், 2001 ஆம் ஆண்டு முதல் நீர்கொழும்பு நீதிமன்ற பிரிவின் காதியாராகவும் கடைமையாற்றியுள்ளார்.  கலைப் பட்டதாரியான இவர் கல்வி நிருவாகச் சேவை அதிகாரியுமாவார். இவர் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் திகழ்ந்தார்.
கொழும்பு அல்-ஹிதாயா  மத்தியக் கல்லூரியில் ஆசிரியராகவும்,  நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்தியக் கல்லூரி, மாவனல்லை பத்ரிய்யா  மத்தியக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் கேகாலை கல்வித் திணைக்களத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடைமையாற்றி கல்வித்துறையில் பங்களிப்பு வழங்கி தனது 60 ஆவது வயதில் ஓய்வுபெற்றார்.

இறையடி எய்திய மர்ஹும் எம்.ஆர்.எம். மிஹினார் அதிபரின் அரும்பெரும் சேவைகளை நாங்களும் பொருத்திக்கொள்வோம். வல்ல அல்லாஹ்வும் பொருத்திக் கொள்வானாக

No comments:

Post a Comment