நாங்கள்
ஏற்றுமதி செய்ய வேண்டிய எல்லா பொருட்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் உழைப்பு மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதை நான்
விரும்பவில்லை. வெளிநாட்டில் எமது மக்கள் தொழில் செய்வதன் காரணமாக அவர்களின் குடும்பத்தில்
நடக்கும் நல்லவிடயங்களிலோ அல்லது மரணச் சடங்குகள் போன்ற கெட்ட விடயங்களிலோ பங்குபற்ற
முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அரச நிறுவன மற்றும் அபிவிருத்தி பிரதி அமைச்சர்
ஹிரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
நீர்கொழும்பு
பெரடைஸ் பீச் ஹோட்டலில் நீர்கொழும்பு தொழில்
வல்லுனர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(22) இரவு உரையாற்றுகையிலேயே
அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
நீர்கொழும்பு தொழில் வல்லுனர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்து, நீர்கொழும்பு தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பெர்னாந்து, பொருளார் சுனில் பெரேரா, செயலாளர் தம்மிக்க பெர்னாந்து உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள் பங்குபற்றினர்.
அமைச்சர்
ஹிரான் விக்ரமரத்ன அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
நாங்கள்
தூர நோக்கில் சிந்தித்து நீண்டகால திட்டங்களை அமைக்க வேண்டும். பொது மக்கள் உடப்ட பல்வேறு
தரப்பினரின் கருத்துக்கள் பெறப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளது. ஐக்கிய
தேசியக் கட்சி, சுதந்திரக கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியிலேயே புதிய அரசியலமைப்பையும்
உருவாக்க முடியும். அச்சத்துடன் நாங்கள் வெற்றிபெற முடியாது. சிறந்த தீர்மானத்தை எடுத்து
நீண்ட பயணம் சென்றால் அடுத்த தேர்தலிலும் நாங்களே வெற்றிபெறுவோம். உலகில் குறைந்த தேசிய
வருமானம் பெறுகின்ற நாடுகளில் எமது நாடும் ஒன்றாகும். எனவே வருமானத்தை நாங்கள் அதிகரிக்க
வேண்டும்.
செய்தியும் படங்களும் எம்.இஸட்.ஷாஜஹான்
செய்தியும் படங்களும் எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment