டெங்கு
நுளம்பு பெருகும் வகையில் நீர்கொழும்பு குரணை பிரதேசத்தில புதிததாக
நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டலுக்கு எதிராக பிரதேசவாசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) முற்பகல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு – கொழும்பு பிரதான
வீதியில் நீர்கொழும்பு நோக்கி செல்லும் திசையில் குரணை பிரதேசத்தில் புதிதாக
நிர்மாணிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாதிருக்கும் ஹோட்டலுக்கு எதிராகவும், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு
எதிராகவுமே இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
எதிர்ப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டோர் குறித்த ஹோட்டலுக்கு முன்பாக ஒன்று திரண்டு தமது
எதிர்ப்பை தெரிவித்தனர். இதன்போது
அவர்கள் 'டெங்கு குரணை பிரதேசத்தை அழிக்கிறது',
'அதிகாரிகளே ஏன் இன்னும் மௌனம்?', 'மாநகர
சபை அதிகாரிகளே சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தவும்',
'பாதிக்கப்பட்ட டெங்கு நோயாளிகளுக்கு நஸ்டயீடு
வழங்கவும்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை
பிரதேசவாசிகள் ஏந்தியிருந்தனர்.
இது
தொடர்பிரதேசவாசிகள் தெரிவிக்கையில்,
இந்த
ஹோட்டலைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் வசிக்கும் 14 பேர் டெங்கு
காய்ச்லினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில்
சிறுவர்களும் அடங்குவர்.தற்போதும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று
வருகின்றனர். இரண்டு வயது குழந்தை ஒன்றும்
ஆறாவது நாளாக தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறது. இதுதொடர்பாக
மாநகர சபையில் முறையிட்டோம். அதிகாரிகள் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது
ஹோட்டலின் நீச்சல் தடாகம் மற்றும் இடங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் இருந்தமை
கண்டு பிடிக்கப்பட்டது. ஆயினும்
உரியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுககப்படவில்லை. நிர்மாணிக்கப்பட்டு
இன்னும் திறக்கப்படாதிருக்கும் இந்த ஹோட்டல் தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்
செய்தியும் படங்களும் எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment