நீர்கொழும்ப
மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வரிப் பணம் செலுத்தாவர்களிடமிருந்து வரிப்பணம்
அறவிடுவதற்காக நியமிக்கப்பட்டு பின்னர் தொழில் நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் பொது மக்களிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும்
சட்ட விரோதமாக பணம் அறவிடும் போது நேற்று சனிக்கிழமை நீர்கொழும்பு பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
தலாஹேன
பிரதேசத்தைச் சேர்ந்த ஐவன் நெல்சன் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக
நபராவார். சுந்தேக நபரிடமிருந்து மாநகர சபைக்கு சொந்தமான ஆவணங்கள், ரப்பர்
முத்திரைகள், அடையாள அட்டை என்பவற்றையும் பொலிஸார்
கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் நீர்கொழும்பு போலவலான பிரதேசத்தில்
ஒருவரிடம் வரிப்பண கட்டணம் அறவிட வந்த பொது தயாராக இருந்த பொலிஸார் சந்தேக நபரை
கைது செய்துள்ளனர்.
சந்தேக
நபர் சிறு வியாபாரிகள், சுய தொழிலில்
ஈடுபடுவோர் மற்றும் பொது மக்கள் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து அவர்கள் மாநகர சபைக்கு வரிப்பணம் செலுத்த வேண்டும் என்று கூறி பெரும் தொகைப்
பணத்தை சட்டவிரோதமாக அறவிட்டு வந்துள்ளார். தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக
வேறு ஒருவரின் மாநகர சபை அடையாள
அட்டையையும் சந்தேக நபர் பயன்படுத்தியுள்ளார். மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் ஒருவரின் பெயர் மற்றும் பதவி
பொறிக்கப்பட்ட ரப்பர் முத்திரை ஒன்றையும்
சந்தேக நபர் பயன்படுத்தியுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின்
பொறுப்பதகாரி உப பொலிஸ் பரிசோதகர் திசாநாயக்க தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரை
மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment