டெங்கு
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு குரணைப் பிரதேசத்தில் பெண் ஒருவர் இன்று
செவ்வாய்க்கிழமை அதிகாலை மரணமாகியுள்ளார்.
சீமன்
சங்கிலிகே அனுசிகா என்ற 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு
மரணமானவராவார். இவர் கடந்த ஐந்து தினங்களாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்
பெற்று மூன்று தினங்களுக்கு முன்னர் டெங்கு வார்டின் விசேடப் பிரிவில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமாகியுள்ளார்.
இந்த
மரணத்துடன் இந்த வருடம் இரண்டாவது டெங்கு நோயாளி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்
சிகிச்சைப் பலனின்றி மரணமாகியுள்ளார்.
இதேவேளை,
நீர்கொழும்பு குரணைப் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாதிருக்கும்
ஹோட்டல் ஒன்றிற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அந்த ஹோட்டலில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுவது அதிகாரிகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட
போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அதன் காரணமாக குரணைப்
பிரதேசத்தில் 14 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டோர் தெரிவித்தனர். இந்நிலையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கினால்
மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.இஸட்.ஷாஜஹான்
எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment