Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, February 22, 2016

‘இறுதி நபித்துவத்தைப் பாதுகாக்கும் மகா நாடு' 'நவமணி' நாளிதழின் செய்திக்கு இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பதில்

'இறுதி நபித்துவ பாதுகாப்பு மாநாடு' என்ற தொனிப் பொருளில்  நிகழ்வொன்று கடந்த ஜனவரி மாதம் 
 (17-1-2016) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம், நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றுடன் இணைந்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா  இதனை ஏற்பாடு செய்திருந்தது.
  இந்நிகழ்வில் அமைச்சர் ரிஸாத் பதியுத்தீன், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி, மௌலவி எம்.ஆர்.எப். பரூத், சட்டத்தரணி நிசார் நூர்தீன், சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் அகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வை  Utv Sri Lanka நேரடியாக  ஒலிபரப்பியது. நிகழ்ச்சியை படம்பிடிக்கவோ வீடியோ செய்யவோ ஏற்பாட்டாளர்களால் அனுமதிக்கப்படவில்லை. அதன்காரணமாக  உரைகளின்  ஒலி வடிவத்தையே கேட்கமுடிந்தது.

நீர்கொழும்பில் இடம்பெற்ற  இறுதி நபித்துவத்தைப் பாதுகாக்கும்  மகா நாடு' தொடர்பான  செய்தி  19-1-2016 அன்றைய 'நவமணி' நாளிதழின் முன்பக்கத்தில் பிரதான செய்தியாக பிரசுரமானது.  ' முஸ்லிம் என்ற உரிமை காதியானிகளுக்கு இல்லை. மனிதர்கள் என்ற உரிமை மாத்திரமே வழங்க முடியும். ஜனாதிபதி, பிரதமருக்கு றிஸ்வி முப்தி விளக்கம்' என்ற தலைப்பில் அந்த செய்தி பிரசுரமாகியிருந்தது.
 இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்  இந்த   செய்தி தொடர்பாக 15-2-2016 அன்றைய திகதியிட்டு 'நவமணி' பத்திரிகை ஆசிரியருக்கு  பதிவுத்தபாலில்  பதில் கடிதம் ஒன்றை அனுப்பி அதனை அந்தப் பத்திரிகையில் பிரசுரம் செய்யுமாறு கேட்டுள்ளது. ஆயினும் அந்தக் கடிதம் இதுவரை பிரசுரிக்கப்படவில்லை என இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்  குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

நவமணி பத்திரிகை செய்தி தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்திற்கும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்   நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் முறைப்பாடு செய்துள்ளது.
'நவமணி' நாளிதழில் பிரசுரமான செய்தியினையும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்  இந்த   செய்தி தொடர்பாக நவமணி பத்திரிகைக்கு அனுப்பி வைத்த கடிதத்தினையும், இதுதொடர்பாக அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்   ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையினையும்   இங்கு வாசகர்களின்  பார்வைக்காக தருகிறோம்.







 அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் - ஸ்ரீ லங்கா
தொ.இல. : 011-2 687568                            619/4, பேஸ்லைன் வீதி,
                                                                        கொழும்பு 9.

REGISTERED POST

15-02-2016                                                         
ஆசிரியர்,
நவமணி - நாளிதழ்,
கொழும்பு.

அன்புடையீர்:
'ஜனவரி 19, 2016 நவமணி பத்திரிகையின் முதல் பக்கத்தில் 'முஸ்லிம் என்ற உரிமை காதியானிகளுக்கு இல்லை. மனிதர்கள் என்ற உரிமை மாத்திரமே வழங்கமுடியும். ஜனாதிபதி, பிரதமருக்கு றிஸ்வி முப்தி விளக்கம்' என்றசெய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
                நீர்கொழும்பு பெரியமுல்லை பெரிய பள்ளிவாசலில் கடந்த 17-01-2016 அன்று இடம்பெற்ற இறுதி நபித்துவத்தைப் பாதுகாக்கும் மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷஷேக் எம்.ஐ.எம் றிஸ்விமுப்தி ஆற்றிய உரையை மேற்கோள்காட்டி இந்த செய்தி மேற்கண்ட பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

                இது குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷஷேக் எம்.ஐ.எம் றிஸ்விமுப்தி அவர்களுக்கு ஸ்ரீ லங்கா அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் பின்வருமாறு சுருக்கமாக தெரிவிக்க விரும்புகின்றது.

'எவர் முஸ்லிம், எவர் முஸ்லிம் அல்லாதவர் என்பதை நிர்ணயிக்கும் உரிமை எந்தமனிதனுக்கும் இல்லை. எந்த அமைப்புக்கும் இல்லை. எந்த நாட்டிற்கும் இல்லை. யார் முஸ்லிம், யார் காபிர் என்பதை நிர்ணயிக்கும் உரிமை அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு. இன்னும் கூறப்போனால் இறுதி ஷரீஅத்தை கொண்டுவந்த இறுதிநபி முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் நடைமுறையில் கூட இவ்வாறான ஃபத்வா வழங்கப்பட்டிருக்கவில்லை. அல்லாஹ்வின் சட்டத்தை மனிதன் தனது கரங்களில் எடுப்பதாயிருந்தால் அது பலனளிப்பதில்லை.
                ஒருவர் மற்றொரு பிரிவாரைக் குறித்து முஸ்லிம் அல்லாதவர் என்று கூறுவதாயிருந்தால், யார் முஸ்லிம்? என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் முன்வைத்திருக்கவேண்டும். நபிகள் நாயகம் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்கள், யார் முஸ்லிம்? என்பதற்கான வரைவிலக்கணத்தை பின்வருமாறு முன்வைக்கின்றார்கள். அதாவதுநாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
                'எவர் நாம் தொழுகின்றதைப் போன்று தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதை புசித்து வருகின்றாரோ அவர்தான் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கின்றார்;. எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்' (ஸஹீஹ் புகாரி- கிதாபுஸ் ஸலாத்- பாப் ஃபஸ்ல் இஸ்திக்பாலுல் கிப்லா- ஹதீஸ் எண்-391)
                எனவே நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய அதே இலக்கணத்தின்படி, முஸ்லிம்களின் கிப்லாவான புனித கஃபாவை முன்னோக்கி, முஸ்லிம்கள் தொழுகின்றதைப் போன்று தொழுது, முஸ்லிம்கள் அறுக்கின்றவற்றைப் புசித்துவருகின்ற அஹ்மதி முஸ்லிம்களாக நாங்கள் இருக்கின்றோம். இது குறித்து அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தூய ஸ்தாபகர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:-
                'நாம் நமது ஜமாஅத்திடம் போதிப்பது என்னவென்றால் அவர்கள் உளப்பூர்வமாக 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்என்ற திருக்கலிமா மீது ஈமான் கொண்டு அதிலேயே நிலைத்து அதிலேயே மரணிக்க வேண்டும் என்பதாகும். மேலும் திருக்குர்ஆனிலிருந்து தெரியவரும் எல்லா நபிமார்கள் மீதும், வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளவேண்டும். அடுத்து அவர்கள் தொழுகை, நோன்பு, ஸகாத்து, ஹஜ்ஜூ அகியவற்றை கடைபிடிக்கவேண்டும். அத்தோடு அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதர் நபிபெருமானார் (ஸல்) அவர்களும் குறிப்பிட்டுள்ள கட்டளைகளையும் கடமைகளாகக் கருதி அவற்றை நிறைவேற்றிவர வேண்டும். சுருக்கமாகக் கூறுவதென்றால் எந்தக் கொள்கைகளை ஸலபுஸ்ஸாலிஹீன்கள் ஒருமுகமாக ஏற்றிருந்தார்களோ, மேலும் எந்தக் கொள்கைகள் அஹ்லே ஸூன்னத்தின் ஏகமனதான கருத்தில் இஸ்லாம் எனப்படுகின்றதோ அவற்றின் மீதுநம்பிக்கை கொள்வது கடமையாகும். இதுவே எங்களின் மார்க்கம் என்பதை வானத்தையும் பூமியையும் சாட்சியாகக் கொண்டு நான் கூறுகின்றேன்' (அய்யாமுஸ்ஸூலாஹ்- ரூஹானி கஸாயின் பாகம் 14 பக்கம்-323)
                இஸ்லாத்தின் கலிமா 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்'-  'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இல்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்'
                மேற்கண்டகலிமாவில் முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் திருத்தூதராவார் என்றே ஈமான் கொள்வது ஒரு முஸ்லிமின் கட்டாயக் கடமை. இதற்கு மேலதிகமாக முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இறுதிநபி என்று ஈமான் கொள்ளவேண்டும் என்பதை கலிமாவுடன் இணைத்துக் கூறுவது, இஸ்லாத்தின் கலிமாவையே திரிபுபடுத்தும் ஒருசெயலாகும்.

                இறுதிநபித்துவத்தை பாதுகாக்கவேண்டியது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையல்ல. இஸ்லாத்தின் போதனையுமல்ல. அல்லாஹ்வின் கட்டளையுமல்ல. இஸ்லாம் முழுமை பெற்ற மார்க்கம் என்று (அல்குர்ஆன்: அல்மாயிதா- வசனம்-3) கூறும் திருக்குர்ஆன், உம்மத்தி நபித்துவத்தின் வாசல் மூடப்படவில்லை என்றே ஆணித்தரமாகக் கூறுகின்றது.'
மேற்கண்ட எமது பதிலை தாங்களின் மேலான பத்திரிகையில் தாமதிக்காமல் பிரசுரிக்குமாறு தயவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.
               
அ.அப்துல் அஸீஸ்
ஊடகவியல் செயலாளர்.
தொ.பே :0777 753440

















Defenders of Finality of Prophethooda threat!

By A. Abdul Aziz.
Press & Coordinating Secretary,
Ahmadiyya Muslim Jama’at – Sri Lanka.


In Pakistan organisations like Khatme Nubuwwat have been allowed to grow and flourish and they now yield considerable power and influence over the government.  Their religious ideology is now intrinsically woven into the political structure leading to extremism that has now spiralled out of control.

“.....it is now beyond the power of [the Pakistan] government to reverse the situation for Ahmadis. Over time the religious political parties have gained in strength, sensitising the population to the status of Ahmadis to the point where ‘the common man can be incited and brought to the street’ against Ahmadis.’ (Views of a senior government adviser in Pakistan, noted in the 2007 report of the UK Parliamentary Human Rights Group mission to Pakistan into internal flight for Ahmadis, entitled Rabwah: A Place For Martyrs?

It notes that the instigators behind the persecution of Ahmadis in Pakistan and other countries are connected with the Khatme Nubuwwat (‘finality of prophethood’) movement  meaning that there can be no prophets after the Prophet Muhammad (peace be upon him, and that the same movement is also active in Sri Lanka.

Khatme Nabuwwat is an international religious organisation founded in Pakistan which exerts considerable political and civic influence. Its main aim is to refute the beliefs of the Ahmadiyya Muslim Community (see its website www.khatm-e-nubuwwat.org). In Pakistan Khatme Nabuwwat openly promotes anti-Ahmadiyya sentiment through conferences, television programmes and leaflet distribution. 

This vocal and active minority of Muslims are now exporting this ideology to Sri Lanka and spreading hatred against the Ahmadiyya Muslim Community.

The worrying development of such threats now being made against the Ahmadiyya Muslim Community in Sri Lanka

According to reports, the instigators behind the persecution of Ahmadis in Pakistan and other countries are connected with the "Khatme Nubuwwat" (finality of Prophethood) movement or defenders of finality of prophethood and they are the one, as being a challenge to the Government of Pakistan.

The worrying fact is, the same movement is activated in Sri Lanka. Recently (17 January 2016) in Negombo, a public meeting had been organized by All Ceylon Jammiyathul Ulema (ACJU), in the name of defending the finality of prophethood, in which representative from Government Ministers, Muslim MPs, other Parliamentarians, representatives of other faiths, representatives of legal body and Police Officers were present.

In his address, ACJU President Rizvi Mufthi publicly announced that an office for the defending of finality of prophethood should be opened in Negombo and he himself is prepared to offer his own land for this purpose.

In his most anti-Ahmadi provocative address, ACJU President went on to say that this sort of gatherings will be organized in Colombo and other places in the future.

According to reports, a Muslim Minister also addressed in the event. The Tamil Newspaper “NAVAMANI DAILY” widely covered the event.

It is our concern that unless this hatred and in some cases incitement to violence is stopped now it will escalate further and affect not just Ahmadi Muslims but other Muslims as well as wider society. We believe therefore that this is a serious and real threat to community cohesion in Sri Lanka.

The Ahmadi Muslim Community is a non-violent community and will remain so, but we urge the authorities to take note of the issues raised and take whatever action is necessary to prevent extremists from preaching hatred and violence against Ahmadi Muslims in Sri Lanka and to preserve the social harmony and peace for all its citizens.

  
   

இறுதி நபித்துவ பாதுகாப்பு மாநாடு'  Utv Sri Lanka நேரடியாக  ஒளிபரப்பிய நிகழ்ச்சி  


 நன்றி Utv Sri Lanka

1 comment: