Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, May 17, 2016

சீரற்ற காலநிலையால் நீர்கொழும்பில் 625 குடும்பங்கள் பாதிப்பு - பிரதேச செயலாளர் ஏ. கே. ஆர். அலவத்தை

சீரற்ற காலநிலையால் நீர்கொழும்பில்  625 குடும்பங்கள் பாதிப்புக்குளாகியுள்ளதாக நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஏ. கே. ஆர். அலவத்தை தெரிவித்தார்.
கொச்சிக்கடை, வெலிஹேன, பலகத்துறை, போருதொட்டடை, தளுபத்தை,  பெரியமுல்லை, தளுவகொட்டுவ, அங்குருகாரமுல்ல உட்பட பல கிராம சேவகர் பிரிவுகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன.
நகரின் பல பிரதேசங்களிலும் உள்ள மற்றும் உள்வீதிகள் இன்றைய தினம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிந்தது. இப்பிரதேசங்களில்  உள்ள வீடுகள் பல நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிந்தது. நீரகொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான கொட்டுவை மைதானம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது
.
 கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ரப்பர் வத்தை, கோமஸ்வத்தை ஆகிய பிரதேசங்களில்  அந்தப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும்  அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நீர்கொழும்பு பெரிமுல்லை பெரியபள்ளிவாசல்  பிரதேசமக்கள், பிரதேச அரசியல்வாதிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. தோப்பு பிரதேசங்களில் பாதிக்கப்பட்டள்ள சிலர் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேவை ஏற்படின் தற்காலிக முகாம்களை  அமைக்கவுள்ளதாகவும் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை,  நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பொலிஸார் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தயார் நிலையில் இருப்பதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்







No comments:

Post a Comment