Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, May 16, 2016

படகு செயலிழந்ததன் காரணமாக கடலில் தத்தளித்த நீர்கொழும்பு மீனவர்களை காப்பாற்றிய விமானப்படை ஹெலிகப்டர்

படகு இன்ஜின் செயலிழந்ததன் காரணமாக கடலில் உயிராபத்துக்கு மத்தியில் தவித்துக் கொண்டிருந்த  நீர்கொழும்பு மீனவர்கள் இருவரை விமானப்;படையினர் இன்று காப்பாற்றினர்.
 இதுதொடர்பாக படகில் சென்ற மீனவரான நியூடன் தமெல் தெரிவிக்கையில்,
 நீர்கொழும்பு , பிட்டிபனை மீனவ இறங்குதுறையிலிருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் படகொன்றில்  இருவர் தொழிலுக்கு சென்றோம்.  ஆறு கடல் மைல் தூரத்திற்கு படகில் பயணித்த நிலையில் சீரற்ற கால நிலை  மற்றும் கடும் காற்று காரணமாக  மீண்டும் கரைக்கு திரும்பும் போது இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக
படகு நின்றது.  இந்நிலையில் அதனை செயற்படுத்த  இரண்டு மணித்தியாலங்களாக எடுத்த முயற்சி  செய்தும் அது தோழ்வியில் முடிவடைந்தது. உயிர் தப்பும் நம்பிக்கையை இழந்திருந்த நிலையில் விமானப்படை ஹெலிகப்படர் வந்து எம்மை காப்பாற்றியது. 


கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரும் கரைக்கு திரும்பாததனால் அந்த மீனவர்களது உறவினர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் இதுதொடர்பாக கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.


சீரற்ற கால நிலை  மற்றும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக   கடற்படையினர் விமானப்படையினரின் உதவியை நாடியுள்ளனர். இந்நிலையில் அறு மணித்தியால தேடுதலின் பின்னர் விமானப்படையின்  பெல் ஹெலிகப்டர் அந்த மீனவர்கள் இருவரையும் காப்பாற்றியுள்ளது. பின்னர் காப்பாற்றப்பட்ட மீனவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.







செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்

படங்கள்: 
1.    மீனவர்களை காப்பாற்றிய  பெல் ஹெலிகப்டர் கரைக்கு திரும்பும் காட்சியும் மீனவர்கள் கரைக்கு கொண்டு வரப்படும் காட்சியும்
2.    வைத்தியசாலையில் மீனவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள காட்சி
3.    உறவினர்கள் மற்றும் மீனவர்கள்


No comments:

Post a Comment