சீரற்ற காலநிலையால் நீர்கொழும்பு மற்றும் கட்டானை பிரதேசங்கள் இன்று புதன்கிழமையும் (18) வெள்ள நீரில் மூழ்கியள்ளதை
காணமுடிந்தது.
நகரின் பல பிரதேசங்களிலும் உள்ள உள்வீதிகள் தொடர்ந்தும்; வெள்ள நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாகவும் வீடுகள் நீரில்
மூழ்கியுள்ளதன் காரணமாகவும்; அங்குள்ள மக்கள்
பலர் தமது வீடுவாசல்களிலிருந்து வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்களுடைய
வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்னும் சிலர் தொடர்ந்தும் அங்கு தங்கியுள்ளனர்.
கட்டானை, தளுபத்தை, பெரியமுல்லை, தளுவகொட்டுவ, அங்குருகாரமுல்ல கொச்சிக்கடை, வெலிஹேன,
பலகத்துறை, போருதொட்டை, உட்பட பல கிராம சேவகர் பிரிவுகள் வெள்ள
நீரினால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பொது மக்கள் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தொழிலுக்கு செல்லாமல்
இருப்பதுடன் மாணவர்களின் வருகையிலும் பாடசாலைகளில் இன்று மூன்றாவது தினமாகவும்
மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீரகொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான கொட்டுவை மைதானம் முழுமையாக
நீரில் மூழ்கி நீச்சல் தடாகம் போன்று காட்சியளிக்கிறது.
இதேவேளை இன்றைய தினமும் சிறு மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ள
மீனவர்கள் தொழிலுக்காக காடலுக்குச் செல்வில்லை.
படங்கள்
1. கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள
ரப்பர் வத்தை, கோமஸ்வத்தை, செல்லகந்த, தெனியாய வத்தை தளுபத்தை,
கட்டுவை ஆகிய பிரதேசங்களின் காட்சிகள்
2 .நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான கொட்டுவை மைதானம்
3.; மீனவர்கள் தமது படகுகளை நிறுத்தி வைத்துள்ள காட்சி
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment