ஜனநாயக
மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் சசிகுமாரின் வேண்டுகோளுக்கிணங்க Lions Club of Colombo Grand City 306 B2, Scrap metal traders of
Colombo, Stationery traders of Colombo, ஜனநாயக
மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட பிரிவு ஆகியன
ஒன்றிணைந்து வத்தளையின் பல்வேறு பிரதேசங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நேற்று சனிக்கிழமை (21.05.2016)
உதவிகள் செய்தன.
கெரவலப்பிட்டிய
வித்தியாலோக்க மஹா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கியிருக்கும் வத்தளை
பரனவத்தையை சேர்ந்த 220 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் (பாய், பல்துலக்கி,
பற்தூரிகை, மெழுகுவர்த்தி, சவர்க்காரம், படுக்கை
விரிப்பு) மற்றும் 800 பேருக்கு
மதிய உணவாக நூடுல்ஸும் வழங்கப்பட்டது.
அதேபோன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கெரவலப்பிட்டிய
புனித சூசையப்பர் ஆலயத்தில் தங்கியிருக்கும் வத்தளை நைதுவ, கருனாகம மற்றும் விஜேகுமாரதுங்க மைதான வத்தையை
சேர்ந்த 320 குடும்பங்களுக்கு
அத்தியாவசிய பொருட்கள் (பாய், பல்துலக்கி, பற்தூரிகை,மெழுகுவர்த்தி, sanitary napkins சவர்க்காரம், படுக்கை விரிப்பு)
வழங்கப்பட்டன. இதுதவிர மதிய உணவுக்காக 700 நபர்களுக்கு
நூடுல்ஸும் அங்கு தங்கியுள்ளவர்களுக்கு உடன் சமைத்து கொடுக்;கப்பட்டது.
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment