நீர்கொழும்பு
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் புதிததாக
அமைக்கப்பட்ட கணனிக் கூடத் தொகுதி இன்று புதன்கிழமை
(25-5-2016) சட்டம் ஒழுங்கு மற்றும் தென்பகுதி அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்கவினால்
திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
கல்லூரியின் காப்பாளர் திருமதி யோகேஸ்வரி விஜயரத்தினம் பிரதம விருந்தினராகவும், நீர்கொழும்பு
வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி. பெர்னாந்து , கல்லூரி அதிபர் புவனேஸ்வரராஜா, தொழிலதிபர்
பி. பரத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில்
கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் திறமை காட்டிய
மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
35
இலட்சம் ரூபா செலவில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தினால்
கணனிக் கூடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment