சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை
மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட நிவாரணப் பொருட்களை
ஏற்றிக்கொண்டு முதலாவது விமானம் நேற்று (21) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை
வந்தடைந்தது.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில்
கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களில்
கூடாரங்கள், மின்சார உற்பத்தி உபகரணங்கள்
(ஜெனரேட்டர்கள்), பற்றறிவகைகள், மலசலகூட உபகரணங்கள் உட்பட பல்வேறு
பொருட்கள் அடங்கியிருந்தன.
நிவாரணப் பொருட்களை இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் இந்திய
உயர்ஸ்தானிகர் வை கே சின்ஹா கையளித்தார். கடற்படை தளபதி, விமானப்படை தளபதி உட்பட அதிகாரிகள் பலர் இதன்போது
சமூகமளித்திருந்தனர்.
No comments:
Post a Comment