பாடசாலை
செல்வதற்காக தனது தாயாருடன் பாதை மாறிக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் பஸ் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த
விபத்துச் சம்பவம் ஆடிம்பலம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சுமித் விஸ்வ சாரங்க என்ற
14 வயது மாணவனே சம்பவத்தில் பலியானவராவார்.
இந்த விபத்துச் சம்பவத்தில் கடும் காயங்களுக்குள்ளான மாணவனின் தாயார் நீர்கொழும்பு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில்
பலியான மாணவன் ஆடிஅம்பலம வித்தியாலயத்தில்
ஒன்பதாம் தரத்தில் கல்வி பயில்பவராவார்.
மாணவன்
தனது தாயாருடன் பாதை மாறிக் கொண்டிருந்த போது பஸ்யால பிரதேசத்திலிருந்து கதிரானையில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையொன்றுக்கு
ஊழியர்களை ஏற்றி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் மாணவனையும் தாயாரையும் மோதி இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க
பொலிஸார் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment