நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய
வீதியில் கல்மங்கட பாலம் அருகில் வியாழக்கிழமை (26) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி; ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு திசையிலிருந்து சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி
கிம்புலாபிட்டிய திசையிலிருந்து வந்து
கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தாகொன்ன பிரதேசத்தைச் சேர்ந்த விக்கரமாராச்சிகே தாகொன்ன (45 வயது) என்பவரே சம்பவத்தில் பலியானவராவார். கட்டானை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்
No comments:
Post a Comment