Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, May 29, 2016

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு அபராதம்

   நவீனரக வேன் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த போது நீர்கொழும்பு கொச்சிக்கடை, தளுவகொட்டுவ  பிரதேசத்தில் வைத்து கொழும்பு கலால் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு நீர்கொழும்பு மஜிஸ்ட்ரேட் கபில துசாந்த எப்பிட்டவெல  60 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

சட்டவிரோத மதுபானத்திற்காக 10 ஆயிரம் ரூபாவும், கைப்பற்றப்பட்ட  வாகனத்தை (வேன்)  சட்டவிரோத செயலுக்காக பயன்படுத்தியமைக்காக 50 ஆயிரம் ரூபாவும் அபராதமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டதுடன், குறித்த வாகனத்தை அதன் உரிமையாளரே சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்திய காரணத்தினால் வாகனத்தை அரச உடைமையாக்குமாறும்  கடந்த வியாழக்கிழமை (26) நீதவான் உத்தரவிட்டார்.
இரகசிய தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்கு   கலால் அதிகாரிகள் முயற்சி செய்தபோது, சந்தேக நபர் பயணித்த வேன் வேகமாக  சென்றுள்ளது. தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கொச்சிக்கடை, தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து வாகனத்தை மறித்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அத்துடன் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு மதுபான  போத்தல்களையும்  சந்தேக நபர் பயணித்த வேனையும் கலால் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களின் பெறுமதி 25 இலட்சம் ரூபா என அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட  நபர் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களை விற்பனை செய்வதற்காக குளியாபிட்டிய பிரதேசத்திற்கு கொண்டு சென்றுகொண்டிருந்த போதே கலால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment