நீர்கொழும்பு நகர
மத்தியில் அமைந்துள்ள அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையம்
ஒன்று மூடப்படும் நேரம் கடந்து திறந்து வைக்கப்பட்ட நிலையில் அதிக விலையில்
மதுபானத்தை விற்பனை செய்த போது கொழும்பு கலால் விசேட பிரிவினரால் கடந்த புதன்கிழமை
(25)
சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின்போது
குறித்த மதுபான விற்பனை நிலையத்தின் வாயில் கதவு
அரைவாசி மூடப்பட்டு
யாரும் அறியாத
வகையில் குழு முறையில் நபர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அனுமதியளிக்கப்படாத
நேரத்தில் மதுபானம் விற்பனை செய்வதற்கு பிரதேச அரசியல்வாதி ஒருவரின் உதவி
இருப்பதாக தெரிய வருகிறது.
இந்த சட்டவிரோத செயற்பாடு
தொடர்பாக குறித்த மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக கலால் அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்கவுள்ளனர்
No comments:
Post a Comment