Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, May 29, 2016

பாரிய அலைகளில் சிக்கி மீனவர் மரணம்

நீர்கொழும்பு கடற்பகுதியிலிருந்து  சிறிய படகொன்றில் கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவர் ஒருவர் பாரிய அலைகளில் சிக்கி கடந்த புதன்கிழமை (25) மரணமாகியுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போருதொட்டை பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் அஜித் பெரேரா (51 வயது) என்ற இரண்டு பிள்ளைகளுடைய தந்தையே கடலலைகளில் சிக்கி மரணமடைந்த மீனவராவார்.

 சம்பவத்தில் இறந்த மீனவர் சிறிய படகொன்றில்  இன்னொரு மீனவருடன் கடற்றொழிலுக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில்  பாரிய அலைகளில் சிக்கி இவர்கள் பயணித்த படகிலிருந்த இன்ஜின் கடலில் விழுந்துள்ளது. இன்ஜினை எடுப்பதற்காக முயற்சித்தபோது குறித்த மீனவர் கடலில் விழுந்து  மூழ்கியுள்ளார். மீனவரின் சடலம் பின்னர் கரையொதுங்கிய நிலையில்  மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment