Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, June 4, 2016

ஊடகவியலாளர் பிரடி கமகே மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது: ஜுன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவு

  ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும், இணைய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவரும்  'மீபுர' இணையத்தளத்தின் ஆசிரியரும், ஊடகவியலாளருமான   பிரடி கமகே மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இருவரை நீர்கொழும்பு பொலிஸார் சனிக்கிழமை (4) கைது செய்துள்ளனர்.
  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார்   நீர்கொழும்பு பதில் நீதவான்  கருணா ஜீவ கமகே முன்னிலையில் ஆஜர் செய்தபோது இருவரையும் ஜுன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 போலவலான, ஜனஜயகம பிரதேசத்தைச் சேர்ந்த அக்கனகே குசான் கிரிஸ்மால் (28 வயது), அக்கனகே சுபுன் ரங்க பெர்னாந்து (22 வயது) ஆகியோரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர். சந்தேக நபர்கள் இருவரும் சகோதரர்களாவர். சந்தேக நபர்களில் ஒருவரான  குசான் கிரிஸ்மால் (28 வயது),  நீர்கொழும்பு மாநகர சபையில் பணியாற்றுபவராவார்.

சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியையும், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.






No comments:

Post a Comment