ஐம்பது
இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளை விழுங்கியும் உடலின் ரகசிய இடங்களில் மறைத்தும் விமானம் மூலமாக
இலங்கைக்கு கடத்தி வந்த பாகிஸ்தான் பெண்கள் இருவரையும் ஆறு வயது மற்றும் மூன்று வயதுடைய பிள்ளைகள் இருவரையும் கட்டுநாயக்க
விமான நிலைய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்தப் பெண்களில் ஒருவர் 25 ஹெரோயின் உருண்டைகளை (260 கிராம்) விழுங்கியும்
மேலும் சில உருண்டைகளை உடலின் ரகசிய இடத்தில்
மறைத்தும், மற்றைய பாகிஸ்தானிய பெண் 17 ஹெரோயின் உருண்டைகளை (242 கிராம்)
விழுங்கியும் நாட்டுக்குள் கடத்தி வந்துள்ளார். போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர்
கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய பிரஜைகளை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்து போதைப் பொருளை வெளியே
எடுத்துள்ளனர்.
சந்தேக நபர்களை நீர்கொழும்பு பதில் நீதவான் கருணஜீவ கமகே குணதாச முன்னிலையில் சனிக்கிழமை
(4) ஆஜர் செய்தபோது எதிர்வரும் 16 ஆம் திகதி
வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் பிள்ளைகள் இருவரையும் தாயின்; பொறுப்பில்
வைக்குமாறும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment