வெளிநாடுகளிலிருந்து
இலங்கைக்கு வரும் பயணிகளை ஏமாற்றி போக்குவரத்து
வசதிகளை செய்து தருவதாக கூறி குளிர் பானங்களில் போதைப பொருளை கலந்து கொடுத்து பயணிகளின் பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையிட்டு வந்த சந்தேக நபரையும் , சந்தேக நபரின் காதலியையும் கட்டுநாயக்க
பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீரகொழும்பு கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த
சிசிர குமார (28 வயது), சந்தேக நபரின் காதலியான 23 வயது யுவதியுமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
சந்தேக நபர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும்
பயணிகளுடன் விமான நிலையத்தில் வைத்து சுமுகமான
முறையில் பழகி அவர்கள் பயணிப்பதற்கு போக்குவரத்து
சேவையை வழங்குவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று இடை நடுவில் வைத்து கடையில் குளிர்
பானத்தை வாங்கி அவற்றில் போதைப் பொருளை கலந்து கொடுத்துள்ளனர். பயணிகள் போதையில் மயங்கிய
பின்னர் அவர்களின் பணத்தையும் உடைமைகளையும் சந்தேக நபர்கள் அபகரித்துக் கொண்டு பயணிகளை அந்த இடத்தில் விடடுச் செல்வதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக்
கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கடந்த இரண்டாம் திகதி சந்தேக நபர்கள் பயணிக்ளை ஏமாற்றி
அழைத்துச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் அவர்களின் வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அதன்போது
அந்த வாகனத்தில் போதைப் பொருள் கலந்துள்ளதாக
கருதப்படும் பான வகை அடங்கிய போத்தலை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் வாக்குமூலத்தை பின்னர் நீர்கொழும்பு
பதில் நீதவான் கருணஜீவ கமகே குணதாச முன்னிலையில்
சனிக்கிழமை (4) ஆஜர் செய்தபோது சந்தேக நபர்களை
8 ஆம் தகிதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
படம்:
சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் காட்சி
No comments:
Post a Comment