இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (11) மாலை கொழும்பு
– சிலாபம் பிரதான வீதியில் வென்னப்புவ இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ, கடவத்த கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த
பியல் மகேஸ் ஜீவந்த கொஸ்தா (33 வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சம்பவத்தில் கொல்லப்பட்டவராவார்.
கொலை செய்யப்பட்டவர் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் பிரதான வீதிக்கு வரும்போது,
முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர்
அவரை தாக்கி கத்தியால் குத்தியுள்ளார். சம்பவத்தில் இறந்தவர் தப்பியோட முயன்றபோது கீழே
விழுந்துள்ளார். இதன்போது சந்தேக நபர் அவர் மீது தொடர்ந்து கத்தியால் குத்தியுள்ளார்
என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
படுகாயமடைந்த நபர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்
போதும் இறந்த நிலையில் இருந்ததாக வைத்தியசாலை
தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத கஞ்சா வியாபாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட
நபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காகவே பலி
வாங்கும் நோக்கில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக இறந்த நபரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக வென்னப்புவ பொலிஸார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
No comments:
Post a Comment