பிறந்து மூன்று தினங்களுடைய பெண் குழந்தை ஒன்றை ராகமை வைத்தியசாலையில் சிறுவர் வார்டில் கைவிட்டு குழந்தையின் தாயார் தப்பிச் சென்றுள்ளார்.
வைத்தியசாலையின் நிருவாகமும்
ராகமை பொலிஸாரும் அந்த குழந்தையை கடந்த வியாழக்கிழமை (9) நீர்கொழும்பு நீதிமன்றில்
ஆஜர் செய்தபோது குழந்தையை பாணந்துறை சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலைய நன்னடத்தை அதிகாரியிடம் குழந்தையின் பாதுகாப்பை ஓப்படைக்குமாறும், ஜுலை மாதம் 21 ஆம்
திகதி குழந்தையின் பாதுகாப்பு தொடர்பாக நன்னடத்தை
அறிக்கையை
சமர்ப்பிக்குமாறும் நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
குழந்தையின் தாயார் என சந்தேகிக்கப்படும் பெண் மற்றும்
அந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்த நபர் ஆகியோர் வைத்தியசாலைக்கு வழங்கிய தகவல்கள்
போலியானவை எனவும், வைத்தியசாலைக்கு வழங்கிய தொலைபேசி இலக்கத்தைக் கொண்டு விசாரணைகள்
மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ராகமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹெட்டி ஆராச்சியின் ஆலோசனையின்
பேரில் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment