ஊடகவியலாளர் பிரடி கமகே மீது நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் வைத்து கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்தும், சம்பவத்தோடு தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுமாறு
வலியுறுத்தியும் நேற்று சனிக்கிழமை பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பல்வேறு
சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை
ஏற்பாடு செய்திருந்தன.
நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் அருகில்
வந்தடைந்த பேரணியினர்
அங்கு கூட்டமொன்றை நடத்தினர். அதற்கு முன்னதாக இந்த தாக்குதல்
சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களிலும் துண்டுப்பிரசுரத்தை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
ஊடகவியலாளர்களின் உயிரை பாதுகாப்போம், கொலைக்காரர்களுக்கு
இடமளிக்க வேண்டாம், நீர்கொழும்பில் பாதாள அரசியலுக்கு முடிவு கட்டுவோம் போன்ற வாசகங்கள்
எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
இந்த
ஆர்ப்பாட்டத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர்
ரொயிஸ் பெர்னாந்து, மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், மனித உரிமை
செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாந்து, மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பெரும்
எண்ணக்கையானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment