ஊடகவியலாளர்
பிரடி கமகேயை நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் வைத்து தாக்கிய சமபவம் தொடர்பாக கைது
செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரையும் நீர்கொழும்பு
பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த இன்று செவ்வாய்க்கிழமை (12) கடும் நிபந்தனைகளுடன்
பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு
மாநகர சபையின் வாசிகசாலையில் சிற்றூழியராக பணியாற்றும் துசான் கிரிஸ்மால் பெர்னாந்து,
அவரது சகோதரரான சுபுன் ரங்கன பெர்னாந்து ஆகியோரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்ட
சந்தேக நபர்களாவர்.
சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 50 ஆயிரம்
ரூபா கொண்ட இரண்டு நபர்களின் சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டனர்.
தாக்குதல்
சம்பவத்தை தொடர்ந்து ஊடகவியலாளர் பிரடி கமகே நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்த
முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர்கள் கடந்த ஐ{ன் மாதம் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டு
நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது சந்தேக நபர்கள்
சார்பில் பல தடைவைகள் பிணை கோரிக்கை விடுக்கப்பட்ட
போதும் நீதவானினால்; பிணை கோரிக்கையை நிராகரிக்கப்பட்டது.
நேற்று (12) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்கள் சார்பில்
பிணை கோரிக்கை விடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரகோன் உட்பட ஏழு சட்டத்தரணிகள் ஆஜராயிருந்தனர்.
இரு தரப்பு
சட்டத்தரணிகளின் வாதங்களின பின்னர்; நீர்கொழும்பு
பிரதான நீதவான் சந்தேக நபர்களை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், சந்தேக நபர்கள் மாதத்தின் கடைசி
தினத்தில் மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவிற்கு
ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment