Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, July 9, 2016

நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பம்

 நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் சனிக்கிழமை (9-7-2016) முற்பகல் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின்; ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்துவின் தலைமை உரையை அடுத்து கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது. இதில்; கட்சி உறுப்புரிமையை  பெறுவதற்கான படிவத்தை  பூர்த்தி செய்து பலர் கட்சியில் சேர்ந்து கொள்வதற்கு விண்ணப்பம் செய்தனர்.








படங்கள்: மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்து உரையாற்றுவதையும், கட்சி உறுப்புரிமையை  பெறுவதற்கான படிவத்தை சிலர்  பூர்த்தி செய்வதையும், ஆதரவாளர்களையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment