அதிகரிக்கப்பட்டுள்ள வற் வரிக்கு எதிர்ப்பு
தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நீர்கொழும்பு நகர மத்தியில் எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
மக்க்ளி விடுதலை முன்னணியினால் ஏற்பாடு
செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டு தமது
எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின்
மேல் மாகாண சபை உறுப்பினர் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த
அமரசிங்க ஊடகங்களுக்கு பின்வருமாறு
தெரிவித்தார்
.
ரணில் விக்கரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தற்போதைய
அரசாங்கம் பழைய அரசாங்கம் சென்ற பாதையிலேயே பயணித்து மக்கள் மீது வரிகளை
சுமத்துகிறது. அண்மையில் அதிகரி;க்கப்பட்ட வற் வரி மக்கள் மீது தாங்க முடியாத
சுமையாக அiமைந்துள்ளது. சிறுநீர் பரிசோதனை, இரத்த பரிசோதனை
உட்பட சகல சுகாதார சேவைகளுக்கும் பொது
மக்கள் தாங்க முடியாத வகையில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. சகல வர்த்தகர்களினதும்
மாத வருமானம் 33 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்கள்
நாடெங்கும் அதிகரித்த வற் வரிக்கு எதிராக தற்போது ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி
கடந்த நான்காம் திகதி முதல் ஒரு வார காலம் நாடு முழுதும் அதிகரிக்கப்பட்ட வரிக்கு எதிராக
ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது என்றார்.



No comments:
Post a Comment