நீர்கொழும்பு மாநகர சபையின்
அதிகாரத்திற்குட்பட்ட பல பிரதேசங்களிலும் நேற்று புதன்கிழமை (13) நுளம்பு பெருகுவதை
தடுக்கும் வகையில் மாநகர சபையின் பொது சுகாதார
பிரிவினரால் புகை அடிக்கப்பட்டது.
வீதிகள், வீடுகள், கடைத் தொகுதிகள்
என பல பகுதிகளிலும் புகை அடிக்கப்பட்டது.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலர்
அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படம்: நீர்கொழும்பு தளுபததை
பிரதேசத்தில் புகை அடிக்கப்படுவதை படங்களில் காணலாம்.





No comments:
Post a Comment