Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, August 21, 2016

நீர்கொழும்பில் போதைப் பொருள் விநியோகித்த நபர் போதைப் பொருளுடன் கைது : 31 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

     குற்றச் செயல்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையாகி வந்த  நபர் ஒருவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் போதைப் பொருள் விநியோகித்துக் கொண்டிருக்கும் போது நீர்கொழும்பு பிராந்திய  சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிஸ்ஸாவெல்ல வீதி, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த மோதரகே நிஹால் சில்வா என்ற 51 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

சந்தேக நபரிமிருந்து  45 ஆயிரம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான  2  கிராம் 200 மில்ல்pகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் போதைப் பொருளைப் பெற்று நீர்கொழும்பு மற்றும் அயற் பிரதேசங்களில்  அதனை விpநியோகித்து வந்துள்ளார். சந்தேக நபர்இவ்வாறு நீண்ட காலமாக போதைப் பொருளை விற்பனை செய்து வந்துள்ளதாகவும், பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து  போதைப் பொருளை கொள்வனவு செய்வது போன்று நடித்து சந்தேக நபரை பொலிஸார் நீர்கொழும்பு கல்கத்தை சந்தியில் வைத்து கைது செய்ததாகவும்  சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகரன் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியலால் தசநாயக்க ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகரன், பொலிஸ் பரிசோதகர்களான ரஹுப், சந்தன, பெரேரா, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க , சமித் ஆகியோர் சுற்றவளைப்பபை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை சந்தேக நபரை பொலிஸார்  கடந்த வியாழக்கிழமை மன்றில் ஆஜர் செய்த போது நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி. குணதாச எதிர்வரும் 31ஆம் திகிதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



No comments:

Post a Comment