அடுத்த வருடம் திருமண பந்தத்தில் இணைய
இருந்த காதலர்கள் நீர்கொழும்பு பீச்
பார்க் கடற்கரைக்கு ஓய்வுக்காக சென்ற வேளையில்
எதிர்பாராத விதமாக காதலன் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு
பரிதாபகரமாக மரணமாகியுள்ளார்.
தூனகஹ, மில்லகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த
ஹசான் மேனுக்க பெரேரா என்ற 23 வயது இளைஞரே கடலில் மூழ்கி
பலியானவராவார்.
சம்பவத்தில் இறந்த இளைஞன் கடந்த 17 ஆம் திகதி
போயா தினத்தன்று தனது காதலி
மற்றும் நண்பர்களுடன் 'பீச் பார்க்' கடற்கரைப்
பூங்காவுக்கு விநோதப் பயணம் வந்துள்ளார். கடற்கரைக்கு வந்திருந்த சிறுவர்கள்
விளையாடிய பந்து கடலில் விழுந்துள்ளது .குறித்த இளைஞன் அதை எடுப்பதற்காக சென்ற
வேளையில் பாரிய அலையில் சிக்கி கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அந்த வேளையில்
உடனடியாக செயற்பட்ட உயிர்காப்பு வீர்ர்கள் இருவர் கடலின் ஆழமான பகுதிக்கு இழுத்துச்
செல்லப்பட்டுக்கொண்டீரந்த இளைஞனை காப்பாற்ற முயற்சி செய்த போதிலும் பாரிய அலைகளின்
தாக்கம் காரணமாக அவர்களால் இளைஞனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
அடுத்த நாள்
காலை 7 மணியளவில் கொழும்பு துறைமுக கடற்படை முகாமைச்
சேர்ந்த விசேட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு
சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து மூன்று
கிலோமீற்றர் தூரத்தில் போருதொட்ட, கம்மல்தொட்ட கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் இளைஞனின்
சடலத்தை மீட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment