கிராமிய
பொருளாதார அலுவல்கள் அமைச்சு நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கட்டுரை போட்டியில்
நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்வி பயிலும் செல்வி மஃசூக் பாத்திமா சஹ்லா என்ற மாணவி இரண்டாம்
இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.
பாடசாலை
மாணவர்களின் உடல் , உள வளர்ச்சிக்கு பால் பருகுவதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில்
இவர் எழுதிய கட்டுரைக்கே இரண்டாமிடம் கிடைத்துள்ளது.
பண்டாரநாயக்க
ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் அண்மையில்
நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து செல்வி மஃசூக் பாத்திமா சஹ்லா பரிசை பெற்றுக்கொண்டார்.
மாணவி ஜனாதிபதியிடமிருந்து பரிசு பெறுவதை படத்தில் காணலாம்.
தகவல் - நீர்கொழும்பு
முஸாதிக் முஜீப்

No comments:
Post a Comment