நீர்கொழும்பு, வத்தளை, கந்தானை, மினுவாங்கொடை, கம்பஹா
, சீதுவை,– ஜா-எல ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு நுழைந்து 20 இலட்சம் ரூபாவுக்கு
மேற்பட்ட பெறுமதியுடைய தங்க நகைகள், தொலைக் காட்சி இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள்
போன்றவற்றை திருடிய சந்தேக நபர்கள் இருவரை ஞாயிற்றுக்கிழமை (14) மாலை நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு
பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுனாமி அஜித் என்று அழைக்கப்படும் பி.ஏ. அஜித்குமார, நில்பனாகொட ஜயந்த என்று அழைக்கப்படும் பி.ஏ. கயந்த ஆகிய
இரு பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளே
கைது செய்யப்பட்டவர்களாவர்.
பழைய இரும்பப் பொருட்கள், பிளாஸ்ரிக் பொருட்களை வீடுகளில்
வாங்குவது போன்று நடித்து ஆட்களில்லாத வீடுகிளல் சந்தேக நபர்கள் திருடியுள்ளனர். திருடப்பட்ட
பொருட்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில்
சந்தேக நபர்கள் போதைப் பொருள் பாவனைக்கு செலவிட்டுள்ளதாக விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
நீர்கொழும்பு, கம்பஹ, கொட்டதெனியாவ, மினுவாங்கொட, கடவத்தை
ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைத்துள்ள பிடிவிறாந்துகள் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் தேடி வந்த நிலையில் சந்தேக
நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நபர் ஒருவரை பயன்படுத்தி சந்தேக நபர்களை நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுபாஸ் பிரியதர்சன, பொலிஸ் கான்ஸ்டபிள்களான
சுதத், கொஸ்தா, ஹேரத் உட்பட பொலிஸ் குழுவினர் சந்தேக நபரகளை கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களையும்
கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களை
மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார்
தெரிவித்தனர்.


No comments:
Post a Comment