Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, December 10, 2016

25ஆயிரம் ரூபா அபராதத் தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முச்சக்கர வண்டி சாரதிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம்: கைது செய்யப்பட்ட 19 பேருக்கு 16 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியல் பிணை கோரிக்கை நிராகரிப்பு

வீதி சட்ட வீதிகளை  மீறுகின்ற  வாகன சாரதிகளுக்கு  அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள  25ஆயிரம் ரூபா அபராதத் தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு  நகரில் முச்சக்கர வண்டி சாரதிகள்  கடந்த 2 ஆம் திகதி  மேற்கொண்ட  ஆர்பாட்டத்தை அடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 19 பேரின் சார்பில் விடுக்கப்பட்ட பிணை  மனு கோரிக்கையை நிராகரித்த  நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த சந்தேக நபர்களை டிசம்பர் மாதம்; 16 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டவர்களில் ஒருவர் கம்பஹா மாவட்ட தனியார் பஸ் சங்கத்தின்  தலைவர் மதுரகே லெம்பர்ட் என்பவராவார்.
  நீதிமன்ற தடையுத்தரவை மீறியமைபொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, பொலிஸாரின் கடைமைக்கு இடையூறு ஏற்படுத்தியமைபொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியமை, இரண்டு பேரை கடத்திச சென்று தாக்கியமை  உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
நாட்டு சட்ட திட்டம் சகலருக்கும்  சமமானதாகவும் நீதியானதாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். வன்முறை ரீதியில் செயற்பட்டு, பொதுச் சொத்துக்களுக்கு நஸ்டத்தை ஏற்படுத்தி, நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட சந்தேக நபரகளுக்கு பிணை வழங்க முடியாதென  கூறிய நீதவான், சந்தேக  நபர்களின் சார்பாக விடுக்கப்பட்ட பிணை மனு கோரிக்கையை நிராகரித்து சந்தேக நபர்களை 16 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.



No comments:

Post a Comment