22 வயது குடும்பப் பெண்ணை வல்லுறவு செய்ததாக சந்தேகத்தின்
பேரில் கைது செய்யப்பட்ட ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிரவெலிவத்த நேற்று (3-4-2017)
உத்தரவிட்டார்.
ஜனபத மாவத்தை, தளுவகொட்டுவ, கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ஜி.தீப்தி ரொபின்சன் (43 வயது) என்பவரே தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.
சந்தேக நபரை கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்து மன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (3) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரின் சார்பில்
விடுக்கப்பட்ட பிணை மனுவை எநிராகரித் நீதவான் சந்தேக நபரை தொடரந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கு சொந்தமான ஜனபத மாவத்தை, தளுவகொட்டுவ, கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள வீடோன்றை பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளரான பெண்ணின் குடும்பத்திற்கு சந்தேக நபர் வாடகைக்கு கொடுத்துள்ளார். பெண்ணின் கணவர் மேசன் தொழில் செய்பவராவார்
சம்பவம் இடம்பெற்ற கடந்த வெள்ளிக்கிழமை (31-3-2017) பிற்பகல்
1 மணியளவில் சந்தேக நபர் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குழந்தையும் வீட்டில் இருந்துள்ளனர். சந்தேக நபர் 22 வயதான ஒரு குழந்தையின் தாயாரான அந்த பெண்ணை அச்சுறுத்தி பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார் எனவும், சம்பவம் இடம்பெற்றவேளை பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளியில் சென்றுள்ளார் எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சந்தேக நபர் வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள ஓட்டுத் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் ஆவார்.

No comments:
Post a Comment