Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, April 29, 2017

தாகொன்ன பிரதேசத்தில் பட்டாசு தயாரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் ஒருவர் காயம்

 நீர்கொழும்பு கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாகொன்ன பிரதேசத்தில் பட்டாசு தயாரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை  (28) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
கிம்புலாபிட்டிய வீதி , தாகொன்ன பிரதேசத்தில்  அமைந்துள்ள 'சக்தி அனுமா' என்ற பட்டாசு தொழிற்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 பட்டாசு தயாரிக்கும் நிலையத்திற்கு அருகில் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் புல் வெட்டும் இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி புல் வெட்;டிக்கொண்டிருக்கும் போது திடீரென்று தொழிற்சாலை பகுதியில் வெடிவிபத்து இடம் பெற்றுள்ளதாகவும், விபத்தின் காரணமாக ஊழியரின் முகம் மற்றும் இரண்டு கைகளுக்கு காயம் ஏற்;பட்டுள்ளதாகவும், புத்தாண்டு காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலை இன்னும்  பட்டாசு தயாரிப்புக்காக இன்னும் திறக்கப்படவில்லை எனவும் தொழிற்சாலை உரிமையாளரின் உறவினர்கள் தெரிவித்தனர்.



விபத்தின் காரணமாக கிம்புலாபிட்டிய, ஒரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த  திலான் இந்திக பெரேரா ((36 வயது) என்ற ஊழியரே காயமடைந்தவராவார். வுpபத்தின் காரணமாக தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. கட்டானை பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment