Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, May 1, 2017

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் நீர்கொழும்பிலிருந்து ஆயிரம் ஆதரவாளர்கள்

ஐக்கிய  தேசியக் கட்சி கொழும்பு கெம்பல் மைதானத்தில்  நடத்தும்  மே தின கூட்டத்தில் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியிலிருந்து 1000 ஆதரவாளர்கள் (1-5-2017) பங்குபற்றினர்.
ஐக்கிய  தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல்  தொகுதி பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் இருந்து 20 பஸ்களில்  1000 இற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள்; சென்றனர்.

 மதுபானத்திற்காகவோ பணத்துக்காகவோ அல்லாமல் உண்மையான கட்சி ஆதரவாளர்களே  மே தினக் கூட்டத்தில் பங்குபற்றுவதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து நடத்தும் நல்லாட்சி அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு வரை எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து  செல்லும் எனவும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்து  அங்கு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்










No comments:

Post a Comment