நீர்கொழும்பு
கிம்புலாபிட்டிய , வெரெல்லவத்தைப் பிரதேசத்தில்
அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையில்
இன்று (23) மாலை 4 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் எரி காயங்களுக்குள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் நீர்கொழும்பு
மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சசி குமார்
என்ற 22 வயது இளைஞரே காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.
ரெல்லவத்தைப்
பிரதேசத்தில் அமைந்துள்ள டானியா எனும் பட்டாசு
தொழிற்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் காரணமாக பட்டாசு தொழிறசாலை
பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவம்
இடம்பெற்ற இடத்திலிருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வீடொன்றில் விபத்தினால்
ஏற்பட்ட அதிக சப்தத்தின்hல் ஏற்பட்ட அதிர்ச்சி
காரணமாக அநத வீட்டில் பொருத்தப்பட்டிருந்த அழங்கார மின்குமிழ் கீழே விழுந்ததினால் பாடசாலை
மாணவன் ஒருவனின் காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம்
தொடர்பாக கட்டானை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.








No comments:
Post a Comment