வயோதிபர்
ஒருவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி மற்றொரு
வயோதிபர் பலியான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை
(9) முற்பகல் நீர்கொழம்பு பிரதான வீதியில்
புனித மரியாள் தேவாலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
பத்மநாதன்
என்று அழைக்கப்படும் நபரே சம்பவத்தில் பலியானவராவார் என தெரிய வருகிறது. 67 வயது மதிக்கத்தக்க இவர் கொழும்பு கொச்சிக்கடை
பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது
கொலை செய்யப்பட்ட நபருக்கும் அவரை கத்தியால்
குத்திய சந்தேக நபருக்குமிடையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும்,
இருவருக்குமிடையில் இன்று
ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து சந்தேக நபர் கத்தியால் குத்தியுள்ளதாகவும்
தெரிய வருகிறது.
சம்பவத்தை
அடுத்து பொலிஸார் கத்தியால் குத்தப்பட்ட நபரை
நீர்கொழும்பு வைத்தியசாலைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். சந்தேக நபரை பொலிஸார்
கைது செய்துள்ளனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தியை அருகில்
உள்ள வடிகானிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம்
தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:
Post a Comment