டெங்கு
நோயினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
டெங்கு நோயாளிகளை இன்று (15) முற்பகல் 11 மணியளவில் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி கர்தினால் மெல்கம்
ரஞ்சித் ஆண்டகை பார்வையிட்டார்.
இதன்போது
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிலந்தி பத்திரண, கத்தோலிக்க மதத் தலைவர்கள்,
வைத்தயர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், தாதியர்கள் உட்பட பலர்
உடன் இருந்தனர்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வைத்தியசாலையில்
அமைக்கப்பட்டுள்ள சகல டெங்கு வார்டுகளுக்கும்
விஜயம் செய்து நோயாளிகளை பார்வையிட்டு நோயாளிகளை ஆசிர்வாதித்ததுடன் , ஆறுதுல் வார்த்தைகளையும்
தெரிவித்தார்.
ஜனாதிபதியின்
உத்தரவுக்கு அமைய அமைக்கப்பட்டு வரும் தற்காலிக டெங்கு வார்டினையும் கர்தினால் பார்வையிட்டதுடன்
அங்கு பிரார்த்தனை செய்தார்.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்
பின்னர்
வைத்தியசாலையின் அருகில் உள்ள தம்மிட்ட தேவலாயத்திற்கு கர்தினால் விஜயம் செய்தார். அங்கு இலங்கை இராணுவத்தால் டெங்கு நோயாளிகளுக்கு
இலவசமாக இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அங்கு நோயாளிகளையும் வைத்தியர்களையும்
இராணுவத்தினரையும் சந்தித்த கர்தினால் அவர்களுடன் உரையாடியதுடன் ஆசிர்வாதம் செய்தார்.
இராணுவம் இலவசமாக மேற்கொள்ளும் இரத்த பரிசோதனை நடவடிக்கையை பாராட்டிய கர்தினால்
நன்றியும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment