டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இருவர்
நேற்று திங்கட்கிழமை (17) நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி
இறந்துள்ளனர்.
கட்டானை, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தைச்
சேர்ந்த 48 வயதுடைய சச்சினி ரொட்ரிகோ மற்றும் மங்குளிய , பிட்டிபனை பிரதேசத்தைச் சேர்ந்த
28 வயதுடைய மகேஸ் நிரோசன் ஆகியோரே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மரணமடைந்தவர்களாவர்.
48 வயதுடைய சச்சினி ரொட்ரிகோவின் கணவர் விமானியாக பணியாற்றுபவராவார். இவர்
nடெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட தனியார் வைத்தயசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த
நிலையில் இரண்டு தினங்களுக்ககு முன்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
திங்கட்கிழமை (17) மரணமடைந்துள்ளார்.
பிட்டிபனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய
மகேஸ் நிரோசன் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் டெங்குவினால் பாதிக்கப்பட்ட நிலையில்
நீர்கொழும்பு வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.
கடந்த ஆறு மாத காலத்தில் டெங்கு காய்ச்சிலினால் பாதிக்கப்பட்டு
நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 16 நோயாளிகள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது



No comments:
Post a Comment