இளம் காதல் ஜோடி ஒன்று பமுனுகம் பிரதேசத்தில்
உள்ள ஹோட்டல் ஒன்றில் உல்லாசமாக இருந்த வேளையில் காதலி ஹோட்டல் அறையில் மரணமடைந்த சம்பவம்
பமுனுகம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மினுவாங்கொட கல்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த
21 வயது யுவதியே மரணமடைந்தவராவார். குறித்த காதலர்கள் இருவரும் நீண்ட காலமாக பழகி வந்துள்ளதுடன்
சம்பவம் இடம்பெற்ற ஹோட்டலுக்கு பல தடைவைகள் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழமைப் போன்று அங்கு சென்று இருவரும் உல்லாசமாக
இருந்தபோது காதலி திடீரென்று சுகயீனமடைந்துள்ளார். பின்னர் ஹோட்டல் முகாமையாளருடன்
இணைந்து சுகயீனமடைந்த யுவதியை காதலர் பமுனுகம வைத்தியசாலையில் கொண்டு சென்று அங்கிருந்து
மேலதிக சிகிச்சைக்காக ராகமை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வைத்தியசாலையல்
அனுமதிக்கும் போது அந்த யுவதி இறந்துள்ளதாக தெரிய வருகிறது.
சந்தேகத்தின் பேரில் யுவதியின் காதலர் பமுனுகம பொலிஸார்
கைது செய்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment