Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, July 18, 2017

தேசியடெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் நீர்காழும்பு நகர துரித டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

தேசியடெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் நீர்காழும்பு நகர துரித டெங்கு ஒழிப்புவேலைத்திட்டம் இன்று (18) காலை தளுபத்தை பிரதேசத்தில் ஆரம்பமானது.
'டெங்கை ஒழிப்போம். நீர்கொழும்பை பாதுகாப்போம்' எனற தொனிப் பொருளில் பிரதி அமைச்சர்நிமல்லான்ஸா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின்பாரியார் விசேட வைத்திய நிபுணர் சுஜாத்தா சேனாரத்ன விசேட அதிதியாக கலந்துகொண்டார்.

சுகாதார சேவை  பிரதிப் பணிப்பாளர்  வைத்தியர் சரத் அமுனுகம, உலக சுகாதார நிறுவனத்தின்பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்புப் படையினர், 
தாதியர்கள், பொலிஸார் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்நீர்கொழும்பு அமைப்பாளர் லலித் டென்ஸில், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும்பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். நிகழ்வில் பிரதேச மக்களுக்கு குப்பைக் கூலங்களை அகற்றுவதற்கான கூடைகள் வழங்கப்பட்டன.

செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான் 






தளுபத்தை பிரதேசம் உட்பட நகரின் பவ பகுதிகளிலும் இன்றைய தினமும் நுளம்புகளை ஒழிக்கும்வகையில் புகை அடிக்கப்பட்மை குறிப்படத்தக்கது.
 நிகழ்வில் பிரதி அமைச்சர் நிமல்லான்ஸா உரையாற்றுகையில் கூறியதாவது,

நீர்கொழம்பு நகரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை எனபொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். நூங்கள் முறையான வேலைத்திட்டம் ஒன்றைஆரம்பித்துள்ளோம். கடந்த இரண்டு வார காலமாக துரித வேலைத்தட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.  பொது மக்களின் ஒத்துழைப்புக் கிடைத்தால் இலங்கையில்  முன்மாதிரியான டெங்குஒழிப்பு வேலைத்திட்டத்தை   நீர்கொழும்பு  தேர்தல் தொகுதியில்; மேற்கொள்ள முடியும் என்றநம்பிக்கை  எமக்கு உள்ளது.






 குப்பைக் கூலங்களை ஒழிப்பதற்காக  நான்கு பிரிவினர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்,  மாநகர சபையினர், பொது மக்கள் , பாடசாலை மாணவர்கள், சிவில் அமைப்பினர் என்ற அந்த நான்கு  பிரிவினரையும்  இணைத்து செயற்படும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும்ஒரு மாத காலத்தில் நீர்கொழும்பில் 75 வீதமான டெங்கு நுளம்புகள் அழிக்கப்பட்டுவிடும் என்றார்.



No comments:

Post a Comment