Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, August 3, 2018

முன்னாள் பிரதி அதிபருக்கு நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா (PHOTOS)


நீர்கொழும்பு  விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் 15 வருட காலம் பிரதி அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற எம். எஸ். எம். முனவ்வரின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு கடந்த புதன்கிழமை  (1-8-2018) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைப்பெற்றது.
பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ரெ. சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபர் பெ. பாரத்குமார் பிரதம விருந்தினராகவும், கல்லூரியின் முன்னாள் அதிபர் என். கணேசலிங்கம், தற்போதைய அதிபர் நா. புவனேஸ்வரராஜா , கல்லூரியின் காப்பாளர்  திருமதி யோகேஸ்வரி  ஜெயம் விஜயரத்தினம், நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத் தலைவர் பொ. ஜெயராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.




 நிகழ்வில் 'விஜய தீபம்' என்ற பெயரில் பாராட்டு விழா மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது. மலரின் முதல் பிரதியை தொழிலதிபர் பெ. பாரத்குமார் பெற்றுக் கொண்டார். பாராட்டு விழா மலருக்கான நூல் ஆய்வுரையை கவிஞரும் ஊடகவியலாளரும், வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் அதிபருமான கலாநெஞ்சன் ஷாஜஹான் நிகழ்த்தினார்.




                         முதல் பிரதி


                                கலாநெஞ்சன் ஷாஜஹான் 

நிகழ்வில் ஓய்வு பெற்றுச் சென்ற  பிரதி அதிபர் எம். எஸ். எம். முனவ்வருக்கு  பொன்னாடை அணிவித்து 'வித்திய கீர்த்தி' பட்டமும் விருதும் வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த காலங்களில் ஓய்வு பெற்றுச் சென்ற 13 ஆசிரியர்கள் நினைவுச் சின்னம் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  11 மாணவர்களும் கேடயம் மற்றும் பரிசு  வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.

முன்னாள் பிரதி அதிபர் எம். எஸ். எம். முனவ்வர் கௌரவிக்கப்படல்





நன்றியுரையை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் அனுர லோகேஸ்வரன் நிகழ்த்தினார். நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழச்சிகளும் இடம் பெற்றன.
                          கலை நிகழச்சி


            ஓய்வு பெற்றுச் சென்ற ஆசிரியர்கள் கௌரவிக்கப்படல்















           புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  11                            மாணவர்கள் கௌரவிக்கப்படல்
















No comments:

Post a Comment