இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான
வாக்களிப்பு நேற்று (16-11-2019) சனிக்கிழமை நடைபெற்றது.
நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைதியான முறையில்
வாக்களிப்பு இடம்பெற்றது. மக்கள் உற்சாகமான முறையில் வாக்களித்தனர்.
நகரில் உள்ள 78 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றன.
தற்போது நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய
ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதான 44032 (53.03) வாக்குகள் பெற்று நீர்கொழம்பு தேர்தல் தொகுதியில்
வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 31743
(38.23) வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நீர்கொழும்பில் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு
வாக்களிக்கச் செல்வதை படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment