Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, January 16, 2020

வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு


  இந்த ஆண்டுக்கான (2020) பாடசாலையில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதித்து  வகுப்புக்களை  ஆரம்பிக்கும்  தேசிய நிகழ்வு  இன்று நடைபெற்றது.
நாடளாவிய ரீதி;யில் அரசாங்க பாடசாலைகளில்  இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.
புதிதாக  முதலாம் வகுப்புக்கு அனுமதிக்கப்படும்  மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரவேற்றனர்.

 தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி ஏற்றப்படல் மற்றும்   தேசிய கீதம் , பாடசாலை கீதம் இசைக்கப்படல்  என்பன இடம்பெற்றன. அத்துடன் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றன. இதற்கான அறிவுறுத்தல்களை கல்வி அமைச்சு  வழங்கியுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு கல்வி வலயத்திதைச் சேர்ந்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்கும் நிகழ்வு  பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.









நிகழ்வில் புதிய மாணவர்கள் ஆரம்ப பிரிவு மாணவர்களால் மலர்ச் செண்டு வழங்கி வரவேற்று அழைத்து வரப்பட்டனர். அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
உப அதிபர் ஏ.ஈ.கே. பெர்னாந்துபுள்ளே நன்றி உரை நிகழ்த்தினார்.








No comments:

Post a Comment